Sunday, 16 June 2013

குஜராத் அமைச்சர் 54கோடி ஊழல் நரேந்திர மோடி அரசை குறித்த அண்ணன் கைப்புள்ளையின் கண்டன பேருரை





சமிபத்தில் குஜராத்  சுரங்கத்துறை அமைச்சர் 54கோடி ருபாய் லஞ்ச வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார், இது குறித்து பொது கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணன் கைப்புள்ளையின் அனல் உரை,  






அண்ணன் கைப்புள்ளையின் உரை :


                                                                                                                      என்னய்யா ஆட்சி நடத்துற என்ன ஆட்சி நடத்துற  நீ , இல்ல தெரியாமத்தான் கேட்கறேன் என்ன ஆட்சி நடத்துற நீ, என்னமோ குஜாரத்துதான் முன்னேறிய மாநிலம் அங்கனத்தான் எல்லாமே முதலிடம் அப்படி இப்படின்னு பேசுன, செய்திய பார்த்தியா ஒரு அமைச்சர்  54 கோடி லஞ்சம் வாங்கி சிறை சென்றிருக்கிறார், இது கேவலமில்லையா, வெட்கமில்லையா அசிங்கமில்லையா, அவமானமில்லையா  சொல்லுங்க மோடி ,

அன்னையின் சீரிய வழிகாட்டுதலிலும்  மங்கூஸ் தலையரின்  ஆட்ச்சியில் இந்த நாட்டில் இப்படி வேட்க்க கேடான சம்பவத்தை உங்கள் ஆட்ச்சியில் உங்கள் குஜாராத்தில்  நடத்தி உள்ளீர்கள், மக்கள் எங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை சிந்திச்சி பார்க்க வேணாமா நீ,

அலைகற்றை ஊழல் தொடங்கி, ஆதர்ஷ்,காமன் வெல்த்,நிலக்கரி இப்படி நாங்கள் பலாயிரம் கோடி ருபாய் ஊழலை செய்து விட்டு அமைதியாக இருக்கிறோம், நீ என்னமோ 54 கோடி ருபாய் அமைச்சரை நீக்கி இருக்கிறாய் இதில் அவருக்கு 3 வருடம் தண்டனை வேறு, எங்க ஊரு கார்ப்பரேசன் அதிகாரி கூட இத விட அதிக  தொகை வாங்குகிறார் என்பதை அறிந்து கொள்,

காமன் வெல்த் ஊழலில் சிறை சென்ற கல்மாடி இப்போ ஓய்வெடுப்பது சொகுசுமாடி, அண்ணன் ஆ,ராசா அன்றும் இன்றும் வெள்ளை சட்டை புன்னகை மாறியதை கண்டதுண்டா நீ ,அட இது மட்டுமா நாங்க ஹேர் பின் முதல்  ஹெலிகாப்ட்டர்ல வரை பல்லாயிரம் கோடி  ஊழல்  செய்துவிட்டு ஊர்  பக்கம் அமைதியா  ஒதுங்கி அரசியல் தொழில் பண்ணிக்கிட்டு  இருக்கிறோம் நீ என்னடான்னா 54 கொடிக்கே இத்தன அலப்பரை பண்ற என்ன நெனச்சிகிட்டு இருக்க உன் மனசுல, 

உங்க ஊர்ல அரசியல்வாதிமட்டும்தான்யா ஊழல் செய்வான் ஆனா இங்க அரசியல் வாதி மட்டுமல்ல  மட்டுமல்ல, கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கானா பாடும் என்பதை போல, மன்னிக்கவும் கவி பாடும் என்பதை போல, அரசியலில் இல்லாத எங்க அன்னையின் மருமகன் கூட சர்வசாதரணமாக பல நூறு கோடிகளை அன்பளிப்பு பெற்றுள்ளார், இந்த வாழைப்பழ நாட்டு பணக்கார கம்பெனிகளிடமிருந்து, நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், ஊழலில் சிக்கி சுண்ணாம்பாகி இருக்கும்  தேசத்தில் இப்படி ஒரு செய்தி உலக அளவில் நமக்கு அவமானம்  இது , பல்லாயிரம் கோடி ஊழல் செய்தே பல்லிளித்து ஒட்டு கேட்டு வெற்றி பெரும் நமக்கு இந்த அமைச்சரும் இவரை காப்பாற்றாத மோடியும் அவமான சின்னம் என்பதை இங்கே அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்,நன்றி 


அண்ணனின் அனல் உரையை கேட்க்க வந்த மக்கள் கூட்டம்
(நம்புங்க சார் )



     

Thursday, 13 June 2013

அண்ணன் கைப்புள்ள அவர்கள் கூகிள் நிறுவனத்திற்கு எழுதிய கடிதம்

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தலைவர், டாகுட்டர், ஆரெஞ்ச் தமிழன் அண்ணன் கைப்புள்ள அவர்கள் கூகிள் நிறுவனத்திற்கு எழுதிய கடிதம், பிரத்தியேகமாக உங்கள் பார்வைக்கு,





அன்புள்ள கூகிளுக்கு,


இடையறாத சங்கத்து பணிகளுக்கு மத்தியில் உங்களுக்கு இந்த கடிதம் வரைவதில் மிகுந்த மகிழ்ச்சி, உலகமே கூகிளில் அனைத்தையும் தேட எங்கள் டாகுட்டர் விஜய் அவர்கள் கூகிள் கூகிள் தேடிபார்த்தேன் கிடைக்கவில்லை என வருத்தப்பட்டு பாடல் பாடியுள்ளார், தயவு செய்து அவருக்கு உங்கள் அலுவலக அட்ரஸ்ஸை எஸ் எம் எஸ் செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்,

மேலும் நான் தங்கள் வலைப்பூவினையும் பயன்படுத்துகிறேன் என்பது கூகிளுக்கு கிடைத்த மிக பெரிய கவுரவம், எனக்கு ஜிமெயில் தருகிறீர்கள் தயவு செய்து எனக்கு ஈமெயில்  தாருங்கள், பெரும்பாலான கட்சி கூட்டணி தலைவர்கள் ஈமெயில் அனுப்புவதாகவே கோருகின்றனர்,

பிறகு எனது பிறந்த நாள் அன்று கூகிளின் வடிவம் கொடூரமாக கிங் காங் குரங்கு  போன்று இருந்தது என்றும் , பலரும் இதற்க்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர், ஆகவே தயவு அன்று கூகிளில் சங்க  சின்னமான  அடி வாங்கும் ஆண் சிரிக்கும்  புகைப்படத்தை  வைக்குமாறு கேட்டு கொள்கிறேன், 

மேற்கொண்டு உங்கள் தேடுதல் வசதியை உலக மக்கள் அனைவரும் பயன்படுத்துகின்றனர் என்றும் தேவையானவற்ற தேடி பெறுகின்றனர் என்பதையும்  நம் சங்கத்து பூச்சி பாண்டி சொல்ல கேட்டு நானும் என் கிழிந்த ஜட்டியை பல முறை தேடியும் கிடைக்க வில்லை, மீண்டும் மீண்டும் கேட்டு பார்த்தும் கூகிள் சொல்ல மறுக்கிறது இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், மேலும் இதை போலவே என் ரூம் சாவி போன்றவற்றையும் கூகிள் தேடி தருவதில்லை, மன்மோகன் சிங் போலவே தெரியாது என கூறுகிறது, நான் மீண்டும் என் சாவியில் விநாயகர் படம் போட்டிருக்கும் என கூறியும் பதில் இல்லை, இதே நிலை நீடித்தால் சங்கத்து வக்கீல் வண்டு முருகன் மூலம் உங்கள் மீது வழக்கு தொடரப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்,

இரண்டாவது மிக முக்கியமான விஷயம் எங்கோ நடக்கும், ஈரான் ஈராக் போர் இஸ்ரேல் போர் போன்றவற்றை உடனடியாக கூகிளில் செய்தி வருகிறது காரணம் தெரிகிறது, ஆனால் நேற்று தெருமுக்கில் ஒரு சண்டை நடந்தது, மேலும் பக்கத்து வீட்டு ஆன்ட்டி அவள் கணவனின் அல்லையில் மிதித்து கொண்டிருந்தார் அதன் காரணமும் தெரியவில்லை, வாட் இஸ் சண்டை இன் தெருமுக்கு என தேடினேன் பதிலில்லை பிறகு வொய் ஆன்ட்டி அல்லையில் மிதிச்சிங் என்றும் தேடி பார்த்தேன் பதிலில்லை, இந்த மிக முக்கியமான உலக விஷயங்கள் மீதும் சற்று கவனம் செலுத்தும் படியும் உங்களை அறிவுறுத்துகிறேன் ,

படங்கள் தேடுவதிலும் கூகிள் மிக பிரபலமாக விளங்குகிறது என்றார்கள், சுவாமி படம் முதல் ஷகீலா   புகைப்படம் வரை வருகிறது(ஷகிலா படங்கள் அனைத்தும் அருமை )ஆனால் என் நண்பனுடைய செத்துப்போன தாத்தாவின் புகைப்படம் வரவேயில்லை,  கொரங்கு கொமாரு தாத்தா போட்டோ நீடு அப்படின்னு தேடிபார்த்தேன், கொரில்லாவின் புகைப்படங்கள் வருகிறது, அது அவன் தந்தை புகைப்படம் என்றும் தாத்தவினுடையது இல்லை என்றும் கூறிவருத்தபட்டான்  இதையும் கவனிக்கவும்,    

சில சமயங்களில் சில முன்னர் செல்லும் பிகர்களின் முகங்களையும் கூட காணும்படி ஏதேனும் செய்யுங்கள் என்னை போன்ற இளைஞர்களுக்கு அது மிகுந்த உபயோகமாக இருக்கும், விரைவில் இவற்றை ஆவன செய்யுங்கள் இல்லையெனில் நாங்களும் நான்கு கோடி வருத்தப்படாத வாலிபர்கள் மெரினாவில் கூடுவோம், கொஞ்சம் பயந்த பொதுமக்களை அல்லையில் மிதிப்போம் அந்நிய மாநில லாரிகளை கொளுத்தி குளிர் காய்வோம், இது ஒரு எச்சரிக்கை அல்ல கட்டளை,



     
    இப்படிக்கு 

வருத்தபடாத வாலிபர் சங்க தலைவர் ,
டாகுட்டர், 
ஆரெஞ்ச் தமிழன், 
கைப்புள்ள,

Saturday, 8 June 2013

என்னைய ஏன் கிக் பாக்சிங்க்ள தடை செஞ்சாங்கன்னா


நாங்கெல்லாம் நிக்குறது முக்குறது எல்லாமே ஒரு ஸ்டைல் 


நானெல்லாம் தமிழ் நாட்டுல இருக்கறதாலத்தான் மைக் டைசன், ஸ்பீக்கர் பைசன், இது மாதிரி கிக் பாக்சிங் பக்கிங்க இங்க வந்து எட்டிகூட பார்க்கலை,

கிக் பாக்சிங்கள நான் ஒரு சாம்பியன் அப்படிங்கறது பல பேருக்கு தெரியாது, ஏன் எனக்கு கூடத்தான், சென்னையில எங்க பாக்சிங் நடந்தாலும் மொதல்ல கொலகுத்து வாங்குறது நான்தான்,  ஒரு புள்ளபூச்சிய அடிக்கிரமே அப்படிங்கற இறக்கம் இல்லாத இந்த பயலுங்களால, அடிவாங்கி அடிவாங்கி என் உடம்பு ஸ்டீல் பாடி ஆகி போச்சு, சரி இப்படியே போயிகிட்டு  நமக்கு சரி வராது அப்படின்னு ஒரு கிக் பாக்சிங் போட்டியில செயிக்கிரதுன்னு இறங்கி களத்துல போயி நின்னா ஒரு பய பின்னாடிலேர்ந்து கத்துனான். ' சிங்கம் களம் இறங்கிடுச்சே ' சரி இந்த பாசக்கார பயலுக்கு போகும்போது ஒரு டீ தண்ணி வாங்கி  கொடுத்துட்டு போகலாம்னு திரும்பி யாருன்னு பார்த்துட்டு திரும்பறதுக்குள்ள,

 அந்த பன்னாட விட்டா பாரு ஒரு குத்து மூஞ்சி மேல,மண்டைக்குள்ள இருந்த அத்தனை ஸ்பேர் பார்ட்சும்  அப்படியே  உள்ளே ஒரு இடம் விட்டு இடம் மாறி ஓடி ஒளிஞ்சி விளாண்டு கடைசியா கொஞ்சம் அங்க அங்க வந்து செட்டில் ஆச்சு, அந்த அடியிலும் ஒரு துளி கண்ணீர் ஒரு சத்தம் விடலையே, கொஞ்சம் கண்ணுதான் கலங்கலா தெரிஞ்சிச்சு விடலை அந்த பன்னாடைய எட்டிகிட்டு மிரிச்சேன் பாரு அல்லையில, அப்படி ஒரு மிதி, ரெபிரீ கூட நான் கைய ஓங்கும்போது குனிஞ்சும் நகர்ந்தும் ஓடுறான் ஆனா இந்த பய மறுபடியும் ஓடி வந்து கிரிக்கெட்ல போர் போன அம்பையர் காட்டுரா மாதிரியே காட்டினான், கைய முறுக்கி வச்சி எக்கி ஒன்னு விட்டேன் பாரு அங்கிட்டு போய்  விழுந்த பய எந்திரிக்கவே இல்லை, எனக்குள்ள இப்படி ஒரு மாவிரானான்னு நானே நம்பலை,   

சரி நாம அடிச்ச அடியில எதிரிக்கு  நாக்கு தள்ளினதுல நாக்கவுட்டுல ஜெயிச்சாச்சு, கப்ப வாங்குனமா கடைக்கு போனமா கோர்ட்டார் அடிச்சிட்டு குப்புற படுத்தமான்னு இருக்கலாமுன்னு, என் பேர  வின்னரா அன்னவுன்ஸ் பண்ணுவானுங்கன்னு பார்த்தேன்,

ஆனா நான் தோத்துட்டேன்னு சொன்னதும் நான் அப்படியே ஒரு நிமிஷம் ஷாக்காயிட்டேன்,  என்னடா நடக்குது ஏண்டா அண்ணன் பெற சொல்லலைன்னு கேட்டப்பதான் சொன்னானுங்க நீ அடிச்சது ரெப்ரியடா அடிக்க வேண்டிய ஆளை இல்லைன்னு, அடப்பாவிங்களா இத ஏண்டா மொதல்லையே சொல்லலை அப்படின்னு போய்  பார்த்தா  அங்கே ரெப்ரி சட்டசபையில குத்து வாங்குன எம் எல் ஏ மாதிரியே கிடந்தார்,

சரி பாவம் மனுஷனை குமுறி இருக்கமேன்னு கேட்டேன் 

'யோவ் நீதான் ரெப்ரின்னு  சொல்லி தொலைய வேண்டியதானையா' அப்படின்னதுக்கு, 

அந்த ரெப்ரி சொன்னான்,

' எங்கடா சொல்ல விட்ட நீ வாயிலேயே வளைச்சி வளைச்சி குத்துற சரி சைகை காட்டுனாலும் வுட்டுடுவன்னு காட்டுனா கைய முறுக்கிட்டு முதுகுல குத்துற சொமாரி எதுக்க அவன் எரும மாதிரி நிக்கிறான் என் மேல குதிச்சி கும்மாளம் போடுற நீ, உனக்கு இங்க இல்லடா இனி எந்த கிக் பாக்சிங் போட்டியிலையும் சேத்துக்க கூடாதுன்னு'

 அந்த பீன்ஸ் சொல்லித்தொலைக்க இப்போ சும்மா இருக்க வேண்டியதாகி போச்சு, அப்படி இல்லைன்னு வச்சிக்க எத்தனை  ரெப்ரி வந்தாலும் வெரட்டி வெரட்டி அடிப்போம்ல, நானும் சாம்பியந்தான் வீட்ல வந்து பாரு எவ்வளவு கோப்பைய பாத்திரகடைலேர்ந்து வாங்கி வச்சிருக்கேன்னு , (  உண்மைய பேசிட்டனோ )


Thursday, 6 June 2013

கலைஞருக்கு கைப்புள்ளையின் வசைகவி

இந்த புகைப்படத்தில் எதுவும் உள்  குத்து இல்லை  



நான் எந்த கட்ச்சியையும் சார்ந்தவனில்லை என்னுடைய ஓட்டை வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கே செலுத்துகிறேன்,
 ஆகவே என்னை அ.தி.மு.க  அல்லது தே.மு.தி.மு.க என என்ன வேண்டாம்,

வசை பாட  வயதும் இல்லை வசதியும்  இல்லை இருந்தும் பாடுகிறேன்,
நீ ஆட்ச்சிக்கு வருவதை காட்டிலும் அதிகம் அச்சமுற செய்வது,
மீண்டும் கதை வசனம் எழுத துவங்கிவிடுவாயோ என்பதே,
சீனாவின் கொத்து குண்டுகளில் மக்கள் சிதைபட்டனர்,
நீ நமிதாவின் குத்துப்பாட்டில் குஷி கொண்டாய்,
வந்த பொழுது  உன்னுடன் வந்தது வாயும் மஞ்சள் பையும்,
செல்லும் போது உன்னுடன் எடுத்து செல்லபோவது வசவும் சாபமும்,
பிறந்த நாளில் கூட கழுவி ஊற்றப்படும் ஒரே  தலைவன் நீ,
அண்ணன் வைகைபுயலை ஆணிபுடுங்க வைத்ததும் நீ,
நீ தமிழுக்கு தொண்டு செய்தாய் பொய்யில்லை,
அதை விட அதிகம் தமிழை கொண்டு பொருள் செய்தாய்  மிகையில்லை,
நெஞ்சுக்கு நீதி எழுதினாய் யார் நெஞ்சுக்கு என்பது மட்டுமே கேள்வி குறி,
ராசா தப்பு செய்தால் தலித்து என்பாய்,
ராமதாசை இழுக்க ஐயா என்பாய்,
ஸ்ரீதர் வாண்டையாரை தம்பி என்பாய்,
சமயம் நேரும்போது சாதி மத பித்துக்கள் சாடியதாய்,
கிடைக்கும் கேப்பெல்லாம் பேசி திரிவாய்,
உண்ணாவிரதம் கிடந்தாய் சில பத்து நிமிஷங்கள்,
பேரன்கள் மகன்கள் மகள்கள் மனைவிகள் சூழ,
 போர் நிறுத்தம் செய்யப்பட்டு விட்டது பழச்சாறு அருந்தி சொன்னாய்,
இடையாறாது ரத்த சேற்றில் அங்கே தமிழனை அருந்தியது,
உங்கள் கூட்டணி கட்ச்சியும் உலக நாடுகளும் கொடுத்த ஆயுதங்கள்,
முன் ஈழத்தமிழருக்காய் ஆட்சி இழந்தவர்,
பின் பதவிக்காக  ஈழத்தமிழரை பலி தந்தவர்,
உன் தொண்ணுறு வயதில் கவியரங்கம்,
கூடவே மகள் தலைமையேற்ற சுழலும்  சொல்லரங்கம்,
மனைவியுடன்  மாலை மாற்றுதல்,
மாலை பத்திரிகைக்கு பேட்டி,மனைவிக்கு உடல் நலமில்லைஎன்று, 
எங்கள் இளம் பாலகன் பாலச்சந்திரன் புகைப்படம் பார்த்தாயா,
அவன் பிஞ்சு நெஞ்சுக்குள் உன் துரோக நஞ்சின் தோட்டாக்கள்,
வீரனுக்கு பிறந்தவன் அவன் நெஞ்சில் வாள் பாய்ந்து,
இறந்த சோழ மன்னனுக்கு சற்று குறைவில்லை அவன் மரணம்,
அவன் முகம் ஒன்றே போதும் கொழுந்துவிட்டேரியுமே இதயம், 
உன் அத்தனை அழும்புகளையும் கூட பொறுத்து கொள்ள முடிகிறது,
ஆனால் உன் அல்லக்கைகள் அபிஅப்பாவும் யுவ கிருஷ்ணாவும்,
 செய்யும் ரவுசு  இன்னும் மோசம், 



உங்களுக்கு வருத்தபடாத வாலிபர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்,






Wednesday, 5 June 2013

ராகுல் காந்தி அடுத்த இந்திய பிரதமாராக எதிர்ப்பு கைப்புள்ள வாதாடுகிறார்

கைப்புள்ள ராகுல் காந்தி அடுத்த இந்திய பிரதமாராக வருவது பற்றி ஒரு வழக்கு ஒன்றை வாதாடுகிறார், சங்கத்து வலைப்பூவில் அதன் முழு விவரத்தையும் நீங்கள் படித்து அறிந்து சொறிந்து கொள்ள வெளியிடுகிறோம்,


கோர்ட் அறையில் மாண்புமிகு திரு.கைப்புள்ள தனது வாதத்தை எடுத்து வைக்கிறார்,

கைப்புள்ள:குட் மார்னிங் யுவர் ஆனர்  இதோ எதிரில் இருக்கும் இவர் யார் என தெரிகிறதா யுவர் ஆனர், கடந்த சில வருடங்களாக இந்திய பெரதமராக முன்னிறுத்த படும் ராகுல்காந்தி,

நீதியரசர்: யோவ் இவர் தான் ராகுல் காந்தின்னு சொல்லன்யா இவ்வளவு இழுக்குற,

கைப்புள்ள: ஓகே யுவர் ஆனர் இவர் ஒரு இந்திய இத்தாலி கூட்டு தயாரிப்பு

(எதிர்கட்சி வக்கீல் நாராயணசாமி உடனடியாக எழுகிறார்)

நாராயணசாமி: ஐ ஸ்ட்ராங்லி அப்ஜெக்ட் யுவர் ஆனர்

நாராயணசாமியிடம் நமது சங்கத்தலைவர் கைப்புள்ள " யோவ் ஏன்யா இப்படி அடிக்கடி அப்ஜெக்ட் பண்ணி உயிரை எடுக்குற ஒரு ப்ளோவுல போயிகிட்டு இருக்கேன் அப்படியே விடுய்யா,வேணுமுன்னா கேஸ் முடியட்டும் டீ வாங்கிதறேன்யா உக்காருய்யா"  அண்ணனின் உருக்கமான வேண்டுகளுக்கு இணங்க நாராயணசாமி   அமருகிறார், மீண்டும் சங்கத்து சிங்கம் கர்ஜிக்கிறது)


கைப்புள்ள: நா எங்க உட்டேன் யுவர் ஆனர்

நீதியரசர்:  டீ வாங்கி தரதுல விட்டயா,

கைப்புள்ள: ஐ அம் சாரி யுவர் ஆனர் இந்த இத்தாலிய இந்திய கூட்டு தயாரிப்பு இந்திய பெரதமராக வரவேண்டுமென ஆசைப்படுகிறார், ஏற்கனவே இந்த மங்கூஸ் மண்டையர்களின் ஆட்ச்சியில் இந்த நாடு  கொத்த  தெரியாதவன் அம்மி கல்லை கொத்தியதை போல ஆட்சி புரிந்து  நாடு  தாறுமாறாக குழிவிழுந்து கிடக்கிறது யுவர் ஆனர்,

நாராயணசாமி: ஐ ஸ்ட்ராங்லி அப்ஜெக்ட் யுவர் ஆனர்

டென்சனின்  உச்சியில் இருக்கும் அண்ணன் கைப்புள்ள வேகமாக கோர்ட் அதிரும்படி கூறுகிறார் " ஐ ஆம் ஸ்பீக்கிங், யு நாட்  ஸ்பீக்கிங் சிட் டவுன்"

நீதியரசர்: யோவ் கோர்ட்ல இந்த மாதிரி கத்த கூடாது  ஒரு இந்திய குடிமகன் உயர்ந்த பதவிக்கு வர முடியும்னு தெரியுமுல்ல அப்புறமென்ன சரி இவர் இந்திய பிரதமராக வரகூடாதுங்கரதுக்கு என்ன முகாந்திரம் உன்கிட்ட இருக்கு,

கைப்புள்ள: கடுபேத்துறார் யுவர் ஆனர், முகாந்திரம் உள்ளது யுவர் ஆனர் உங்க மூஞ்சிக்கு நேராக ஒரு கொசுவர்த்தி சுருளை வைத்து சுழற்றுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன் யுவர் ஆனர்,

நீதியரசர்: என்னய்யா கோர்ட்டுன்னு நினைச்சியா இல்லை வேற எதாவது நினைச்சியா,

கைப்புள்ள: இல்லை யுவர் ஆனர், நாம் இப்போது பிளாஷ் பேக் சீனுக்கு செல்கிறோம் அதான்,

நீதியரசர்: அதெல்லாம் தேவையில்ல சொல்லு,

கைப்புள்ள: வடோதரா மன்னர் ஒரு முறை அமெரிக்க சென்ற பொது அங்கே ஒரு இளம் அமெரிக்கை மங்கையை கண்டு காதல் கொண்டவர் அந்த மங்கைய மணாளினி ஆக்கி இந்திய கொண்டு வந்தார், தமிழக அல்லக்கை அரசியல்வாதிகள் ரெண்டு  வைத்து கொள்ளும்போது மன்னர் வைத்து கொள்ளக்கூடாதா என்ன?

நீதியரசர்: யோவ் இப்போ அதெல்லாம் உன்ன யாருய்யா கேட்டா விஷயத்துக்கு வாய்யா

கைப்புள்ள: வந்துவிட்டேன் யுவர் ஆனர் அந்த அமெரிக்க மங்கைக்கு ஒரு ரிச்சர்ட் என்ற ஆன் பிள்ளை பிறந்தான் யுவர் ஆனர், ஆனால் இந்திய மன்னரின் அரசிக்கு இருந்தது பெண் பிள்ளை, இந்த வடோதரா மன்னர் என்ன செய்தார் ரிச்சர்டை மன்னனாக்க முயன்றபோது, இங்கே நிற்கும் ராகுல் காந்தியின் தாத்தா நேருமாமா மற்றும் அவரது அமைச்சர் பார்த்திவ் படேலும் இணைந்து

நீதியரசர்: பார்த்திவ் படேல் கிரிக்கெட் விளையாடுறவர், சர்தார் வல்லபாய் படேல்

கைப்புள்ள:அவரேதான் இவர் ஆனர்(இன்னைக்கு ரொம்ப டங் ஸ்லிப்

 ஆகுதே)
அந்த ராணிக்கு பிறந்த பெண்ணுக்கு முடி சூட்டி அரசியாக்கினர், அந்நிய பெண்ணுக்கு பிறந்த மகனுக்கு அதிகாரம் தர மறுத்தனர், வடோதரா மகாராஜாவுக்கு ஒரு நீதி இந்த வந்தேறிகளுக்கு ஒரு நீதியா இதற்க்கு நீங்கள் தான் இந்திய தண்டனை சட்டம் 330 இல்லை 420 இல்லை யுவர் ஆனர் 520 ஏதோ ஒன்றில் சரியான தீர்ப்பை  வழங்க வேண்டும்,
டேன்க் யு யுவர் ஆனர்

நீதியரசர்: இந்த மக்கள் பிரச்சினையை மக்கள் கைகளில் இந்த நீதி மன்றம் ஒப்படைக்கிறது, மேலும் இந்த வழக்கை நடத்திய கைப்புள்ள அவர்கள் கோர்ட்டில் கடுப்பெத்துகிறார் என்ற வார்த்தைகளை பிரயோகித்ததால் அவருக்கு இரண்டாயிரம் அபராதம் விதிக்கிறது,

கைப்புள்ள: ரெண்டாயிரமா தர்மத்துக்கு போராடினா அபராதமா விதிக்கிறது ....       



       

Sunday, 2 June 2013

முப்பது நாளில் இலக்கியவாதி ஆவது எப்படி

இலக்கியவாதியாவது என முடிவு செய்த பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது எழுத ஆரம்பிப்பது, ஸ்ரீ ராமஜெயம் இல்லை, மொதல்ல கவுத இல்லை கட்டுரை இல்லை அட எதையாவது எழுதி தொலைங்க, முக்கியமா நீங்க எழுதுனது உங்களுக்கே புரியக்கூடாது அதுக்காக படிக்க முடியாத அளவு கன்றாவியான கையெழுத்துல எழுதி தொலைக்க கூடாது, பூனை மேலே சென்றது செவ்வாய் கிரக வாசிகள் பேசிகொண்டிருந்தனர் ' உனக்கு உள்ளது உனக்குத்தாண்டா மச்சி' என்பது போல வசனங்களை அமைக்க வேண்டும் செவ்வாய் வாசிகள் தமிழில் பேசுவார்களா என குதர்க்காமான கேள்விகள் மண்டைக்குள் குறிப்பாக எழப்படாது, நீங்கள் எழுதிய கதையை எந்த புண்ணாக்கு நிறுவனம் கூட பிரசுரிக்காது ஆகவே இருக்கும் நகை நட்டையாவது அடகு வைத்து நீங்களே புத்தகமாக வெளியிட வேண்டும், அதற்க்கு முன்பு சில முக்கிய முக்காத குறிப்புகள் சில தொழில் நுட்ப்ப வார்த்தைகள் ஆழ்ந்த படிமம், இந்த வார்த்தைகள் ஆழ்ந்த படிம வகைய சேர்ந்தது, அந்த 108 பக்கத்துல உள்ள நடை மணல்படிமம் அப்புறம் சுண்ணாம்பு படிமம் வகையெல்லாம் நான் இதில் பயன்படுத்தி இருக்கிறேன் என கூற வேண்டும், அதையும் தாண்டி சுவர் ஏறி குதித்து இன்னும் சில வார்த்தைகள் இது பின் நவீனத்துவம் இது சைடு நவீனத்துவம் என்றும் இது மேஜிக் ரியாலிசம் , தக்காளி ரசம் வெந்தய ரசம் போன்ற சொற்களை பயன்படுத்தி நிஜமான எழுத்தாளர்களையும் கூட கலங்கடிக்க வேண்டும் என்பது முக்கிய விதி, அடுத்தது மற்றவர்கள் உங்களை இலக்கியவாதி என சொல்கிறார்களோ இல்லையோ நீங்கள்

அடிக்கொருமுறை கூறி கொள்ள வேண்டும்,அதாவது நம்புங்கய்யா நானும் இலக்கியவாதிதான் என்பது போல,அடுத்த படியாக உங்களுக்கு என வலைப்பூ அல்லது இணையத்தளம் சொந்தமாக இருக்க வேண்டும் முகப்பு பக்கத்தில் உங்கள் மார்பளவு எங்கோ பார்த்துகொண்டு சிரிக்கும் புகைப்படம் இருப்பது நல்லது, ஆனாலும் அதை கூடுமானவரை கொஞ்சம் தவிர்க்கலாம் காரணம் அடியாளம் தெரிந்து கொண்டு சிலர் அல்லையில் மிதிக்கலாம் என்பது தனிப்பட்ட காரணம், இடது பக்கம் இது நான் எழுதிய புத்தகங்கள் என ரெண்டு மூணு புத்தகங்களின் அட்டை படம் இருக்க வேண்டும், அவ்வபோது ஜெயமோகனையும் எஸ் .ராமகிருஷ்ணனையும் பின்னி பெடல் எடுக்க வேண்டும்,    
இந்த  பாருங்க பொன்னியின் செல்வன் எழுத யோசிக்கிற மாதிரியே யோசிக்கிறார்.

இப்பொழுது மிக முக்கிய கட்டத்திற்கு வந்து விட்டோம், உங்கள் வலைதளத்தில் தொடர்ச்சியாக பெரும்பாலும் கண்டன கட்டுரைகளையும் கவுதைகளையும், எழுத வேண்டும் முக்கியம் கலைஞரை ஜெயலலிதாவை சீமானை  தாக்கி பேச இங்கே நிறைய ஆட்கள் இருப்பதால் நாம் உலக அளவில் ஒபாமா போன்றவர்களை இங்கிருந்து கண்டிக்க வேண்டும், கண்டிப்பாக இஸ்லாமியர்களை எதிர்த்து பதிவுகளை இட கூடாது கூடி வந்து கும்மி அடிச்சிடுவாயிங்க, ரொம்ப கேர்புல்ல இருக்கணும் உங்கள் பதிவுகளுக்கும் கூட்டங்களுக்கும் விசிலடிக்கவும் கமெண்ட்டு போடவும் டீ  வாங்கி கொடுத்தாவது பத்து பேர் தயார் செய்ய  வேண்டும், இந்த கமெண்ட் பகுதியில், யு ராக்ஸ் ,தங்கள் நடையில் அருமையான செருப்பு பிஞ்ச கட்டுரை,அந்த கடைசியில பாருங்க அதான் சார், இப்படி குறைந்த பட்சம் ஒரு இருபது கமேன்ட்டுக்கள் வரவேண்டும்,

 பிரியாணி வாங்கி கொடுத்தேனும் இப்படி அல்லக்கை கூட்டத்தை நீங்கள் கூடவே வைத்திருப்பது அவசியம், மூன்றாவது சமகால எழுத்தாளர்கள் நாம் இனி என்ன போகிறேன் என அடிக்கடி நானும் எழுத்தாளன் என மீண்டும் மீண்டும் கூறி கொண்டே இருந்தால், போய் தொலையிறான் நாதரிகள்ள இதுவும் இருந்துட்டு போகுதுன்னு மக்கள் கண்டும் காணாமல் ஒத்துபாங்க, அப்புறம் நீங்க அஞ்சொ பத்தோ குடுத்து விருதுகளை வாங்கி இணைய பக்கத்துல போட்டுக்கங்க,  ஏய் நாம் இலக்கியவாதிதான் இலக்கிய வாதிதான் இலக்கியவாதிதான், 

நீங்களும் விரைவில் இலக்கியவாதி ஆகி நன்றாக ஆணிபுடுங்க சங்கம் வாழ்த்துகிறது