![]() |
| இந்த புகைப்படத்தில் எதுவும் உள் குத்து இல்லை |
நான் எந்த கட்ச்சியையும் சார்ந்தவனில்லை என்னுடைய ஓட்டை வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கே செலுத்துகிறேன்,
ஆகவே என்னை அ.தி.மு.க அல்லது தே.மு.தி.மு.க என என்ன வேண்டாம்,
வசை பாட வயதும் இல்லை வசதியும் இல்லை இருந்தும் பாடுகிறேன்,
நீ ஆட்ச்சிக்கு வருவதை காட்டிலும் அதிகம் அச்சமுற செய்வது,
மீண்டும் கதை வசனம் எழுத துவங்கிவிடுவாயோ என்பதே,
சீனாவின் கொத்து குண்டுகளில் மக்கள் சிதைபட்டனர்,
நீ நமிதாவின் குத்துப்பாட்டில் குஷி கொண்டாய்,
வந்த பொழுது உன்னுடன் வந்தது வாயும் மஞ்சள் பையும்,
செல்லும் போது உன்னுடன் எடுத்து செல்லபோவது வசவும் சாபமும்,
பிறந்த நாளில் கூட கழுவி ஊற்றப்படும் ஒரே தலைவன் நீ,
அண்ணன் வைகைபுயலை ஆணிபுடுங்க வைத்ததும் நீ,
நீ தமிழுக்கு தொண்டு செய்தாய் பொய்யில்லை,
அதை விட அதிகம் தமிழை கொண்டு பொருள் செய்தாய் மிகையில்லை,
நெஞ்சுக்கு நீதி எழுதினாய் யார் நெஞ்சுக்கு என்பது மட்டுமே கேள்வி குறி,
ராசா தப்பு செய்தால் தலித்து என்பாய்,
ராமதாசை இழுக்க ஐயா என்பாய்,
ஸ்ரீதர் வாண்டையாரை தம்பி என்பாய்,
சமயம் நேரும்போது சாதி மத பித்துக்கள் சாடியதாய்,
கிடைக்கும் கேப்பெல்லாம் பேசி திரிவாய்,
உண்ணாவிரதம் கிடந்தாய் சில பத்து நிமிஷங்கள்,
பேரன்கள் மகன்கள் மகள்கள் மனைவிகள் சூழ,
போர் நிறுத்தம் செய்யப்பட்டு விட்டது பழச்சாறு அருந்தி சொன்னாய்,
இடையாறாது ரத்த சேற்றில் அங்கே தமிழனை அருந்தியது,
உங்கள் கூட்டணி கட்ச்சியும் உலக நாடுகளும் கொடுத்த ஆயுதங்கள்,
முன் ஈழத்தமிழருக்காய் ஆட்சி இழந்தவர்,
பின் பதவிக்காக ஈழத்தமிழரை பலி தந்தவர்,
உன் தொண்ணுறு வயதில் கவியரங்கம்,
கூடவே மகள் தலைமையேற்ற சுழலும் சொல்லரங்கம்,
மனைவியுடன் மாலை மாற்றுதல்,
மாலை பத்திரிகைக்கு பேட்டி,மனைவிக்கு உடல் நலமில்லைஎன்று,
எங்கள் இளம் பாலகன் பாலச்சந்திரன் புகைப்படம் பார்த்தாயா,
அவன் பிஞ்சு நெஞ்சுக்குள் உன் துரோக நஞ்சின் தோட்டாக்கள்,
வீரனுக்கு பிறந்தவன் அவன் நெஞ்சில் வாள் பாய்ந்து,
இறந்த சோழ மன்னனுக்கு சற்று குறைவில்லை அவன் மரணம்,
அவன் முகம் ஒன்றே போதும் கொழுந்துவிட்டேரியுமே இதயம்,
உன் அத்தனை அழும்புகளையும் கூட பொறுத்து கொள்ள முடிகிறது,
ஆனால் உன் அல்லக்கைகள் அபிஅப்பாவும் யுவ கிருஷ்ணாவும்,
செய்யும் ரவுசு இன்னும் மோசம்,
உங்களுக்கு வருத்தபடாத வாலிபர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்,

No comments:
Post a Comment