Sunday, 2 June 2013

முப்பது நாளில் இலக்கியவாதி ஆவது எப்படி

இலக்கியவாதியாவது என முடிவு செய்த பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது எழுத ஆரம்பிப்பது, ஸ்ரீ ராமஜெயம் இல்லை, மொதல்ல கவுத இல்லை கட்டுரை இல்லை அட எதையாவது எழுதி தொலைங்க, முக்கியமா நீங்க எழுதுனது உங்களுக்கே புரியக்கூடாது அதுக்காக படிக்க முடியாத அளவு கன்றாவியான கையெழுத்துல எழுதி தொலைக்க கூடாது, பூனை மேலே சென்றது செவ்வாய் கிரக வாசிகள் பேசிகொண்டிருந்தனர் ' உனக்கு உள்ளது உனக்குத்தாண்டா மச்சி' என்பது போல வசனங்களை அமைக்க வேண்டும் செவ்வாய் வாசிகள் தமிழில் பேசுவார்களா என குதர்க்காமான கேள்விகள் மண்டைக்குள் குறிப்பாக எழப்படாது, நீங்கள் எழுதிய கதையை எந்த புண்ணாக்கு நிறுவனம் கூட பிரசுரிக்காது ஆகவே இருக்கும் நகை நட்டையாவது அடகு வைத்து நீங்களே புத்தகமாக வெளியிட வேண்டும், அதற்க்கு முன்பு சில முக்கிய முக்காத குறிப்புகள் சில தொழில் நுட்ப்ப வார்த்தைகள் ஆழ்ந்த படிமம், இந்த வார்த்தைகள் ஆழ்ந்த படிம வகைய சேர்ந்தது, அந்த 108 பக்கத்துல உள்ள நடை மணல்படிமம் அப்புறம் சுண்ணாம்பு படிமம் வகையெல்லாம் நான் இதில் பயன்படுத்தி இருக்கிறேன் என கூற வேண்டும், அதையும் தாண்டி சுவர் ஏறி குதித்து இன்னும் சில வார்த்தைகள் இது பின் நவீனத்துவம் இது சைடு நவீனத்துவம் என்றும் இது மேஜிக் ரியாலிசம் , தக்காளி ரசம் வெந்தய ரசம் போன்ற சொற்களை பயன்படுத்தி நிஜமான எழுத்தாளர்களையும் கூட கலங்கடிக்க வேண்டும் என்பது முக்கிய விதி, அடுத்தது மற்றவர்கள் உங்களை இலக்கியவாதி என சொல்கிறார்களோ இல்லையோ நீங்கள்

அடிக்கொருமுறை கூறி கொள்ள வேண்டும்,அதாவது நம்புங்கய்யா நானும் இலக்கியவாதிதான் என்பது போல,அடுத்த படியாக உங்களுக்கு என வலைப்பூ அல்லது இணையத்தளம் சொந்தமாக இருக்க வேண்டும் முகப்பு பக்கத்தில் உங்கள் மார்பளவு எங்கோ பார்த்துகொண்டு சிரிக்கும் புகைப்படம் இருப்பது நல்லது, ஆனாலும் அதை கூடுமானவரை கொஞ்சம் தவிர்க்கலாம் காரணம் அடியாளம் தெரிந்து கொண்டு சிலர் அல்லையில் மிதிக்கலாம் என்பது தனிப்பட்ட காரணம், இடது பக்கம் இது நான் எழுதிய புத்தகங்கள் என ரெண்டு மூணு புத்தகங்களின் அட்டை படம் இருக்க வேண்டும், அவ்வபோது ஜெயமோகனையும் எஸ் .ராமகிருஷ்ணனையும் பின்னி பெடல் எடுக்க வேண்டும்,    
இந்த  பாருங்க பொன்னியின் செல்வன் எழுத யோசிக்கிற மாதிரியே யோசிக்கிறார்.

இப்பொழுது மிக முக்கிய கட்டத்திற்கு வந்து விட்டோம், உங்கள் வலைதளத்தில் தொடர்ச்சியாக பெரும்பாலும் கண்டன கட்டுரைகளையும் கவுதைகளையும், எழுத வேண்டும் முக்கியம் கலைஞரை ஜெயலலிதாவை சீமானை  தாக்கி பேச இங்கே நிறைய ஆட்கள் இருப்பதால் நாம் உலக அளவில் ஒபாமா போன்றவர்களை இங்கிருந்து கண்டிக்க வேண்டும், கண்டிப்பாக இஸ்லாமியர்களை எதிர்த்து பதிவுகளை இட கூடாது கூடி வந்து கும்மி அடிச்சிடுவாயிங்க, ரொம்ப கேர்புல்ல இருக்கணும் உங்கள் பதிவுகளுக்கும் கூட்டங்களுக்கும் விசிலடிக்கவும் கமெண்ட்டு போடவும் டீ  வாங்கி கொடுத்தாவது பத்து பேர் தயார் செய்ய  வேண்டும், இந்த கமெண்ட் பகுதியில், யு ராக்ஸ் ,தங்கள் நடையில் அருமையான செருப்பு பிஞ்ச கட்டுரை,அந்த கடைசியில பாருங்க அதான் சார், இப்படி குறைந்த பட்சம் ஒரு இருபது கமேன்ட்டுக்கள் வரவேண்டும்,

 பிரியாணி வாங்கி கொடுத்தேனும் இப்படி அல்லக்கை கூட்டத்தை நீங்கள் கூடவே வைத்திருப்பது அவசியம், மூன்றாவது சமகால எழுத்தாளர்கள் நாம் இனி என்ன போகிறேன் என அடிக்கடி நானும் எழுத்தாளன் என மீண்டும் மீண்டும் கூறி கொண்டே இருந்தால், போய் தொலையிறான் நாதரிகள்ள இதுவும் இருந்துட்டு போகுதுன்னு மக்கள் கண்டும் காணாமல் ஒத்துபாங்க, அப்புறம் நீங்க அஞ்சொ பத்தோ குடுத்து விருதுகளை வாங்கி இணைய பக்கத்துல போட்டுக்கங்க,  ஏய் நாம் இலக்கியவாதிதான் இலக்கிய வாதிதான் இலக்கியவாதிதான், 

நீங்களும் விரைவில் இலக்கியவாதி ஆகி நன்றாக ஆணிபுடுங்க சங்கம் வாழ்த்துகிறது 

6 comments:

  1. இப்பந்தான் ஆரம்பிச்சிருக்கீங்க போல ..... நீங்க யாருன்னு குத்து மதிப்பா கணிச்சி வைச்சிருகேன் .... பார்க்கலாம் .... தொடர்ந்து பதிவு எழுதுவீங்களா , இல்ல ஆர்வத்துல ஆரம்பிச்சிட்டு ஒரு பதிவோட நிற்க போகுதான்னு ;-))))

    ReplyDelete
    Replies
    1. நானும் நிறைய எழுதி இந்த இலக்கிய உலகத்துக்கு சேவை செய்யணும்னு தான் சார் ஆசைப்படுறேன்

      Delete
  2. வோர்ட் வெரிபிகேஷனை எடுத்து விடுங்கள் ....

    ReplyDelete
    Replies
    1. எடுத்திட்டேன் சார்

      Delete
  3. இங்கிட்டு சரியா வியாவாரம் ஆகுற மாதிரி தெரியலியே !
    வெளம்பரம் செய்யலியொ ?

    ReplyDelete
    Replies
    1. அல்லோ யெச்குச்மி நாங்கெல்லாம் யெவாரம் பண்றதுக்கு எழுதறவங்க இல்லை சார் உம்மையாண இலக்கியவாதிங்க
      (கூட்டத்துல கட்டு சோத்த அவுக்கப்படாது)

      Delete